திதி: 17.01.2019 யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து ஆண்டுகள் இரண்டு ஆயினும் எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள் ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும் அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா? கனவுகளை நாங்கள் சுமந்து கண்களில் நீர் சொரிந்து கலங்குகிறோம் உங்கள் நினைவால் இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்! நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்! ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி நாளும் இறைவனை வேண்டுகின்றோம்! கணவன், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தகவல்: குடும்பத்தினர்
உலகோடு இணைந்தது
Jan 15, 1941
இறையோடு இணைந்தது
Feb 07, 2017