Skip to main content

31 ம் நாள் நினைவாஞ்சலியும் நன்றிநவில்தலும்

31 ம் நாள் நினைவாஞ்சலியும் 

நன்றிநவில்தலும்


அன்னைமடியில் 
15-01-1941ஆண்டவன் அடியில்
07-02-2017

கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட

திருமதி பரமேஸ்வரி (ஈஸ்வரி) கோணேசபிள்ளை

அவர்கள்

அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா - நீ
எம்மருகில் இருக்கையில் ஏதுகுறை எமக்கு
இணையில்லா தெய்வமே எம் தாயே - உனை
நினைக்கையில் வெம்பி மனம் துடிக்கின்றோம்
அருகிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ-உம்
நினைவுகளை என்றும் இதயத்தில் வைத்துப் பூசிப்போம்- ஆதி
சக்தியாக எமை வழிநடத்தி செல்வீர்கள் அன்னையே!
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில்
இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். 

எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா" எனும் குடும்ப குல விளக்கு மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்து கொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்னாரின் 31 ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதியபோசனமும்  March 11, 2017 சனிக்கிழமை 11 மணியளவில் இலக்கம் 5321 Finch Ave East Scarborough ON M1S 5W2
இல் அமைந்துள்ள Sri Sathya Sai Baba Centre மண்டபத்தில் நடைபெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கோணேசபிள்ளை: 647-853-4194
ஜீவா: 416-319-6814
சுரேஸ்: 416-540-0485
ரமேஸ்: 647-768-7398


"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது." - குறள்


Popular posts from this blog

ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல

ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல தொட்டில் கட்டித் தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான் செத்தாலும் என்னப் போத்த வேணும் செத்தாலும் என்னப் போத்த வேணும் ( ஆத்தா உன் சேல…) ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும் இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும் கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் – நீ சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் ( ஆத்தா உன் சேல…) அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் ( ஆத்தா உன் சேல…)

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போலொரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை

கண்ணீர் அஞ்சலி - குடும்பத்தினர்