Skip to main content

எம் அன்னையின் குறிப்பேடுகளிலிருந்து… (பகுதி 1)

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது:

 1. வாழ்வென்பது உயிர் உள்ளவரை...
 2. தேவைக்கு செலவிடு...
 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி...
 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி...
 5. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை...
 6. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை...
 7. ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை...
 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
 9. உயிர் பிரிய தான் வாழ்வு...ஒரு நாள் பிரியும்...
 10. சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்...
 11. உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு...
 12. உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே...
 13. உன் குழந்தைகளை பேணு...
 14. அவர்களிடம் அன்பாய் இரு...
 15. அவ்வப்போது பரிசுகள் அளி...
 16. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே...
 17. அடிமையாகவும் ஆகாதே...
 18. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,  பாசமாய் இருந்தாலும்,  பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,  உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.
 19. அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்... உன் சொத்தை தான் அனுபவிக்க,  நீ சீக்கிரம் சாக வேண்டுமென,  வேண்டிக் கொள்ளலாம் - பொறுத்து கொள்.  அவர்கள் உரிமையை மட்டும் அறிவர், கடமை  ,அன்பை அறியார்.
 20. அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
 21. இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால் நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,
 22. எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே, நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர், எனவே கொடுப்பதை கொடுத்து விடு, தரவேண்டியதை பிறகு கொடு.
 23. மாற்ற முடியாததை மாற்ற முனையாதே
 24. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே...
 25. அமைதியாக மகிழ்ச்சியோடு இரு...
 26. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு...
 27. நண்பர்களிடம் அளவளாவு...
 28. நல்ல உணவு உண்டு...
 29. நடை பயிற்சி செய்து...
 30. உடல் நலம் பேணி...
 31. இறை பக்தி கொண்டு...
 32. குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்...
 33. இருபது, முப்பது,  நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...
 34. வாழ்வை கண்டு களி...
 35. ரசனையோடு வாழ்...
 36. வாழ்க்கை வாழ்வதற்கே.

Popular posts from this blog

ஆதிபராசக்தி மூல மந்திரம்

மூல மந்திரம்
ஒம் சக்தியே ! பராசக்தியே ஒம் சக்தியே ! ஆதிபராசக்தியே ஒம் சக்தியே ! மருவூர் அரசியே ஒம் சக்தியே ! ஒம் விநாயகா ஒம் சக்தியே ! ஒம் காமாட்சியே ஒம் சக்தியே ! ஒம் பங்காரு காமாட்சியே !
Om Sakthiye Para Sakthiye Om Saktiye Adi Para Sakthiye Om Sakthiye Maruvoor Arasiya Om Sakthiye Om Vinayaga Om Sakthiye Om Kamatchiye Om Sakthiye Om Bangaru Kamatchiye

ஆதிபராசக்தி 108 போற்றி திருவுரு

ஓம் ஒம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம் ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம் ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம் ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மனமாசை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கனகவெளி ஆனாய் போற்றி ஓம் ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம் ஓம் பாலகி வடிந்தவளே போற்றி ஓம் ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம் ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம் ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம் ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம் ஓம் சித்துரு அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம் ஓம் சக்தியே தாயே போற்றி ஓம் ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம் ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம் ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம் ஓம் ஒருதுவத்துக் குடையாய் போற்றி …

நினைவுமலர் (PDF download)

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில்
நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர்
பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள்
வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து.  ( Ver. 1)

பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில்
வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில்
கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன்
துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)