Skip to main content

Posts

Showing posts from March, 2017

எம் அன்னையின் குறிப்பேடுகளிலிருந்து… (பகுதி 1)

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது: வாழ்வென்பது உயிர் உள்ளவரை... தேவைக்கு செலவிடு... அனுபவிக்க தகுந்தன அனுபவி... இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி... இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை... ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை... மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே... உயிர் பிரிய தான் வாழ்வு...ஒரு நாள் பிரியும்... சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்... உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு... உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே... உன் குழந்தைகளை பேணு... அவர்களிடம் அன்பாய் இரு... அவ்வப்போது பரிசுகள் அளி... அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே... அடிமையாகவும் ஆகாதே... பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,  பாசமாய் இருந்தாலும்,  பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,  உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள். அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்... உன் சொத்தை தான் அனுபவிக்க,  நீ சீக்கிரம் சாக

நினைவுமலர் (PDF download)

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில் நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர் பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள் வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து.  ( Ver. 1) பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில் வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில் கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன் துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)

உதயன் கனடா -நினைவாஞ்சலி

லங்காசிறி அறிவித்தல்

31 ம் நாள் நினைவாஞ்சலியும் நன்றிநவில்தலும்

31 ம் நாள் நினைவாஞ்சலியும்  நன்றிநவில்தலும் அன்னைமடியில்  15-01-1941 ஆண்டவன் அடியில் 07-02-2017 கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி (ஈஸ்வரி) கோணேசபிள்ளை அவர்கள் அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா - நீ எம்மருகில் இருக்கையில் ஏதுகுறை எமக்கு இணையில்லா தெய்வமே எம் தாயே - உனை நினைக்கையில் வெம்பி மனம் துடிக்கின்றோம் அருகிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ-உம் நினைவுகளை என்றும் இதயத்தில் வைத்துப் பூசிப்போம்- ஆதி சக்தியாக எமை வழிநடத்தி செல்வீர்கள் அன்னையே! உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.  எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா" எனும் குடும்ப குல விளக்கு மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்து கொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செல