Skip to main content

துர்க்காதேவி தோத்திரம்


ஐந்து கரத்தானை ஆனைமுகச்
சுந்தரனைச் சிவ சோதியனை
முந்திய நாதனை மூலமகா
மந்திரனைக் கழல் வாழ்த்துவமே!

சீர்தருவாரண செல்வனைத்தந்த சிவக்கொழுந்தே
சூர்தருவேதனை தீர்திருவேலனை தொட்டணைத்து
பார்தருசைவமும் வான்தருபேறும் படைத்தவனை
தேர்தருதெல்லியூர் துர்க்கையை போற்றதும் சிந்தை வைத்தே.1

வைத்தகதேத்தும் பழவடியார் குலம் மாண்பு கௌ
கைத்தலத்தே பொற்கலசமும் கஞ்சமும் கொண்டு
இத்தலத்தேனு மணிநகர் துர்க்கை ரட்சகியே
நித்திலம் பூர்த்த நகைமிகுமண்ட நெடுங்கொடியே. 2

கொடியே சுருதிக் குயிலே இமவான் குமாரி என்னும்
பிடியே சிவமாமயிலே பிரணவம் பேச நின்ற
முடிவே முதலே முதுபொருளே துர்க்கை மூவடிவே
அடியேன் உனை எவ்வடிவினில் காண்பேன் அறைகுதியே. 3

அறையும் மறைகளும் ஆகமமும் கலை அத்தனையும்
துறையும் இதிகாசமும் புராணங்களும் சொல்லடங்கா
நிறையும் கருணையும் சச்சிதான்நதமாய் நீள்முடிவின்
பிறையும் பொலிவுறும் துர்க்கைஅம்மா என்னும் பேரமுதே. 4

அமுதென்று அடைவார் அகத்தினும் வாக்கினும் ஆற்றலிலும்
சமுகம் தரவல்ல சாமளையே தெல்லிதண்பதியின்
கமளும் சிவபாரியாதமே துர்க்கை களஞ்சியமே
சமயம் அறிந்திருந்தேத்த அருள் தாரும் அம்பிகையே. 5

அம்பிகை சுந்தரி ஆனந்த பைரவி ஆயதவம்
கம்பையில் ஆற்று காமாட்சி மனோன்மணி கற்பகமாய்
எம்பெருமாட்டி என்றேத்த வரும் துர்க்கை ஈஸ்வரியே
கும்பிடும் போது உன் குரைகழல் போதைகொடுத்தருளே.6

அருளே மயமான ஆரணியே இவ்அவனியிலே
மருளே பிடித்து மனம் தடுமாறுரு வஞ்ச நெஞ்சேன்
பொருளே உணர்ந்து புகள பொருந்து கவி
தெருளே இசைக்க வரம் தருவாய் துர்க்கை சிற்பரையே.7

சிற்பரஞானத் தெளிவும் தெளிவுற்ற சிந்தனையும்
முற்பவ மூலமறுக்க முயன்ற முதுஅறிவும்
சொற்பொருளாகி சுவையாகி யோகதுணை புரியும்
அற்புத தெல்லிப்பளை துர்க்கையே பரமானந்தமே. 8

ஆனந்தவல்லி அபிராமிசெந்தமிழ் ஆட்சிபொங்க
தானும் தொடர்ந்து மதுரை அமர்ந்த தடாதகையே
ஈனம் ததும்பும் தமியேனை ஆளாது என்றுகொரோ
காணம் ததும்பிடும் தெல்லியூர் துர்க்கை கலாநிதியே. 9

நிதியும் கலையும் நிலமும் வளமும்நெகிழ்ந்த பக்தி
துதியும் சுகமும் சுகத்துக்கு இயந்திடு சூழ்நிலையும்
மதியும் கதியும் உன் நோக்கில்லாது வந்திருமோ
விதியும் பணிந்திடும் சிம்மாசன துர்க்கை வீரமுத்தே. 10

முத்தோடு பண்ணிமணித்தோடு இலங்க முடிநடுவே
கொத்தோடு கண்ணி அசைவுறு சந்தனம் குங்குமம் கை
பத்தோடு மேனிபரிமளிக்கும் துர்க்கை பான்மொழியே
சித்தோடுநின்றுன் பணிசெய்ய காட்டுன் சிறுவிழிக்கே. 11

விமியால் அரிவி பொழிந்து வரும் அன்பர் மெய்யவினை
சுழியால் உழலாது உன்றன் முன் அடைந்தால்
மொழியால் பகரும் ஞானம் என்னே
வழியால் தவறுடையோரையும் காத்து வழங்கல் என்னே.12

என்னே நினது அருள் பந்த பிறவி எடுத்தவியான்
அன்னே என அழைக்க அங்கம் துவள அபயகரம்
முன்னே வழங்கும் அம்மா துர்க்கையே நல் முகுந்தனுக்கு
தன்னேரிலா சகோதரியே சிவசாம்பவியே. 13

சாம்பசதாசிவம் தந்தநெல் கொண்டு சகமனைத்தும்
எம்பிணி தீர்த்த திரிபுரையே மெய் விரதமுற்று
தேம்பரு வாமம் பெரும் பாதி கொண்ட திகம்பரியே
நான்படும் வேதனை என்று ஒழிப்பாய் மலைநாயகியே.14

நாயகியே என்று நமனும் அயனும் நவக்கிரக
தூயவரும் திசைகாவலரும் தொழும் துர்க்கையம்மா
ஆயதொண்டர் கணக்குன் கணக்காக்கி அழித்தெழுத
நேயம் மிகுந்த தெல்லி வான் கோபுர கோயில் நின்றவளே.15

நின்றேன் உனது நிரை சிலம்பார்களால் நீதிசொல்ல
நின்றேன் நினது அடியார் பணி கொண்டு நெறியுரைக்க
நின்றேன் அவ்வினை வேர்அறுப்பாய் எனநேர்நடனம்
நின்றேன் உவந்து பொழிகின்ற துர்க்கை நிரஞ்சனியே.16

அஞ்சனம் தேங்கு நயனமும் மூக்கின் அணியழகும்
அஞ்சலம் போக்கும் முறுவலும் காக்கும் தனிக்கரமும்
செஞ்சிலம் பார்த்த திருவடியும் தவசிந்தையிலே
நெஞ்சகம் காண இருந்தருள்வாய் துர்க்கை நேரிழையே.17

நேரிழையாகி நெடுந்தவம்பூண்டு நிகழ்ந்தலிங்கம்
நீரழியாது தழுவிதிருந்தனம் நெய்வளைக்கை
பேரழக்கு ஓங்க பொறித்தவளே நின்பிறங்குபதம்
தாரழவோங்க வென்சென்னிவைப்பாய் துர்க்கை சாந்தினியே. 18

சாந்த நிலை கொழதத்துவம் நின்றிடசாத்திரநூல்
காந்த விளக்கென கற்றாங் கொழுகிட கைலைவெளி
போந்த கதிபெற காட்டு என்றுன் முன் அடைந்தேன்
காத்தருள் அபயவரதகரத்கனித் துர்க்கையே. 19

துர்க்கையம்மா அருள்வாய் என்றுரைந்துன்னை தோத்திரித்தால்
நற்குணமாண்பும் சிறந்த இல்வாழ்க்கையும் நானநன்றி
பொற்புயர் மக்களும் போகமும் வீடும்பொழித்தருள்வாய்
சர்க்கரை பால்பழம் ஊறியசாறுயென சார்ந்தவர்க்கே. 20

சார்ந்து கசிந்து புகழ்பாடி கற்றாதகையதன்பு
கூர்ந்து வழிபடும் தொண்டர்க்கு கூத்திடும் கோமளமே
தேர்ந்து பரவும் திறம் அறியேனே சினந்து தள்ளாது
தோர்ந்து வழுத்த வழிவிடுவாய் துர்க்கை உத்தமியே. 21

உத்தமியே என் உயிரை வெங்கூற்றுவன்
உறுத்தவந்தால் சித்திரநாயகன் செம்மந்துவந்து சிரிப்பரும்ப
முத்திரை காட்டி அணைப்பேன் எனவோர் மொழிபுகழ்வாய்
அத்தனை நீங்காய் தனியுருவே துர்க்கை அஞ்சுகமே. 22

அஞ்சேல் எமனுக்கும் ஆயகிரக அதிபருக்கும்
செஞ்சேவடித்தனை ஆண்டு கொண்டு நீஒழித்தெல்லியிலே
மஞ்சாடும் கோபுர கோயில் வாழ் மகா துர்க்கையே
துஞ்சாது அமனமலர் மீது தோன்றும் துரந்தரியே. 23

சுதந்திரம் காண்பவர் நின்றடி சேவிக்கும் தொண்டினரே
பிதந்தரும் நோயினும் பேயினும் வாடுபவர் வெ;றறியினை
பதந்தரும் நின்னை பணித்தறியாப் பாவிகளே
விதந்தரும் வண்ணம் பராசக்தியே துர்க்கை பேரளகே. 24

அளகெல்லாம் கூடி அணிதிரண்டால் என்னை ஆதியெழில்
வளமையிற்றாங்கு துர்காம்பிகையே நினைவந்துவந்தோர்
சுழலும் சுழுமுனை சோதியும் சோதியில் தோன்றிடும் பூங்
கழலும் கழலில் கதித்தெழ பானுவும் காணுவரே. 25

காணாத காட்சியும் கல்லாத கல்வியும் கள்ளமுள்ளோர்
பூணாத மாலையும் உண்ணாத தில்லை புதும்பழமும்
நாணத நெஞ்சும் நலியாத வீடும்நயந் தருள்வாய்
சேனாரும் துர்க்கை பராசக்தியே நினை சேர்ந்தவர்க்கே. 26

சேர்ந்திடுதொன்டர் துயர்கண்டுநின்றன் சிவக்கொழுந்தே
கூர்ந்திடு வேலை குளிர் வருவாய் எனை குiறியரந்து
சேர்ந்திடுவார்க்கு வரந்தருவாய் என நின்றழுதேன்
சோர்ந்திடுவார்க்கு துணைதரும் துர்க்கை சுடர்விளக்கே. 27

விளக்கறியா மனைக்கே கிடந்து விளங்குகொலை
களத்திடை எங்குகடாவென நொந்து கலங்கும் யான்
உளத்துயர் மாற்றி ஒடுக்கியவாயுவி உனையறியும்
வளத்தினையெய்த வருமோ துர்க்காதேவி மாணிக்கமே. 28

மாணிக்க வாசகன் பிட்டிடும் செல்வி வருத்தமுற
பாணிக்கிரகணம் பண்ணியநாதனை பாண்டிவைகை
பேணிக்கரை கட்டவிட்டெமக்கு அடிபித்தவன் நீ
கோணி துரத்திடு வாரணியே துர்க்கை கோமதியே. 29

மதியாது உனது சீர் பேசாத வாயரை வாயில் என்றும்
மிதியாது உனது திருக்கோவில் சூழாத வீணரில்லம் சதியே
புகழும் சளர்க்கரை தோன்று தாங்கு சிவ
பொதியே பெறுநிலை தந்திடம்மா துர்க்கை பூரணியே. 30


பூரண அம்பிகையே தோன்றிட தோன்றுவார் போகவிட்டாய்
ஆரணகாளி குழந்தைக்கு ஞான அமுதளித்தாய்
ஊரணி கோபுர கோயில் வாழ் துர்க்கை உமையவளே
ஆரணிகெய்துவர் நின்னருள் இன்றேல் அடியனையே. 31

அடியார் உறவினுக்கு ஆசைப்பட்டேன் என்அல்லலெல்லாம்
பொடியாகும் என்று திடமடைந்தேன் நின்பொன்னருளால்
மடியாத சூரனை மாய்த்தவயற்றுர்க்கையே
மிடியேதுமின்றி உலகெலாம் உய்திட வேண்டுவனே. 32

வேண்டிய வேண்டியாங்கெய்துவர் ஆகமவேதநெறி
தூண்டிய சேவை தொடங்கநின்பாதம் துதிப்பவர்க்கே
கூண்டை குஞ்சு குருவியொத்தேனை குறையகற்றி
ஆண்டருள்வாய் துர்க்கையம்மா இடர்களகன்றிடவே. 33

அகன்று மகலாத மும்பல வாசைன ஆசறுநின்
அகன்ற மலரடி தோத்திரமோதி அடங்கினற்கே
புகன்ற மறைக்கும் எட்டாத சோதிபொருட் துர்க்கையே
அகன்ற அறிவும றிவிப்பாய் என் வந்தனனே. 34

வந்தேன் உன்வாசல் மடுத்தேன் உன்தோற்றம் மனமொழிமெய்
தந்தேன் உன்றொண்டில் தளர்ந்தேன் என்பூசை தகாதென்வே
செந்தேன் னந்றமம் செறியலங்கார சிவதுர்க்கையே
நொந்தேன் எனது வேட்டை நினது நாதற்கும் நுகலுதியே. 35

நுகலும் புரத்துக்கு அதிகாரியே உன் ரூபத்தில் இறையும்
இசை இறைக்கு நகல்வாய் விசும்பும்
பரிமள யாமனை பைங்கிளியே
சிவமும் விளங்கு மிளிர்துர்க்கையே தமிழ் சீர்தரவே. 36

Popular posts from this blog

நினைவுமலர் (PDF download)

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில்
நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர்
பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள்
வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து.  ( Ver. 1)

பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில்
வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில்
கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன்
துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)

ஆதிபராசக்தி 108 போற்றி திருவுரு

ஓம் ஒம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம் ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம் ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம் ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மனமாசை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கனகவெளி ஆனாய் போற்றி ஓம் ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம் ஓம் பாலகி வடிந்தவளே போற்றி ஓம் ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம் ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம் ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம் ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம் ஓம் சித்துரு அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம் ஓம் சக்தியே தாயே போற்றி ஓம் ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம் ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம் ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம் ஓம் ஒருதுவத்துக் குடையாய் போற்றி …

ஆதிபராசக்தி மூல மந்திரம்

மூல மந்திரம்
ஒம் சக்தியே ! பராசக்தியே ஒம் சக்தியே ! ஆதிபராசக்தியே ஒம் சக்தியே ! மருவூர் அரசியே ஒம் சக்தியே ! ஒம் விநாயகா ஒம் சக்தியே ! ஒம் காமாட்சியே ஒம் சக்தியே ! ஒம் பங்காரு காமாட்சியே !
Om Sakthiye Para Sakthiye Om Saktiye Adi Para Sakthiye Om Sakthiye Maruvoor Arasiya Om Sakthiye Om Vinayaga Om Sakthiye Om Kamatchiye Om Sakthiye Om Bangaru Kamatchiye