Skip to main content

படித்ததில் பிடித்தது

ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை….

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் – நான்முதலடி வைக்கையில்
தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்…
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க!
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே, உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே….
ஒரே மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ உறங்கிய இரவுகளை ஞாபகம்கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே….
உன்னை குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் – உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே….
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி, சில நேரங்களில் –
என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து
போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள் என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை பழக
என் விரல் நீண்டது போல்
கைகொடுத்து எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று,
வருத்தப் படாதே. சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை.சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை.
காலம் வரும்போது இதை
நீயும் புரிந்து கொள்வாய்!
இனி நான்
வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.
என் வாழ்வு
அமைதியோடும் – உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????

Popular posts from this blog

ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல

ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல தொட்டில் கட்டித் தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான் செத்தாலும் என்னப் போத்த வேணும் செத்தாலும் என்னப் போத்த வேணும் ( ஆத்தா உன் சேல…) ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும் இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும் கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் – நீ சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் ( ஆத்தா உன் சேல…) அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் ( ஆத்தா உன் சேல…)

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போலொரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை

கண்ணீர் அஞ்சலி - குடும்பத்தினர்