- ஓம் ஒம்சக்தியே போற்றி ஓம்
- ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம்
- ஓம் உலக நாயகியே போற்றி ஓம்
- ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம்
- ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம்
- ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம்
- ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம்
- ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்
- ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்
- ஓம் மனமாசை தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் கனகவெளி ஆனாய் போற்றி ஓம்
- ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம்
- ஓம் பாலகி வடிந்தவளே போற்றி ஓம்
- ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம்
- ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம்
- ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம்
- ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம்
- ஓம் சித்துரு அமர்ந்தாய் போற்றி ஓம்
- ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம்
- ஓம் சக்தியே தாயே போற்றி ஓம்
- ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம்
- ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம்
- ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம்
- ஓம் ஒருதுவத்துக் குடையாய் போற்றி ஓம்
- ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்
- ஓம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்
- ஓம் அண்டமே விரிந்தாய் போற்றி ஓம்
- ஓம் ஆன்மிகச் செல்வமே போற்றி ஓம்
- ஓம் அனலாக ஆனாய் போற்றி ஓம்
- ஓம் நீராக நிறைந்தாய் போற்றி ஓம்
- ஓம் நிலனாகத் திணிந்தாய் போற்றி ஓம்
- ஓம் தூராக வளர்ந்தாய் போற்றி ஓம்
- ஓம் துணிபொருள் நீயே போற்றி ஓம்
- ஓம் காராக வருவாய் போற்றி ஓம்
- ஓம் கனியான மனமே போற்றி ஓம்
- ஓம் மூலமே முதலே போற்றி ஓம்
- ஓம் முனைச்சுழி விழியே போற்றி ஓம்
- ஓம் வீணையே இசையே போற்றி ஓம்
- ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி ஓம்
- ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி ஓம்
- ஓம் சகலமறைப் பொருளே போற்றி ஓம்
- ஓம் உத்தமி ஆனாய் போற்றி ஓம்
- ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி ஓம்
- ஓம் நெஞ்சம் நீ மலர்வாய் போற்றி ஓம்
- ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி ஓம்
- ஓம் துரிய நிலையே போற்றி ஓம்
- ஓம் துரியா தீத வைப்பே போற்றி ஓம்
- ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி ஓம்
- ஓம் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் போற்றி ஓம்
- ஓம் கருவான மூலம் போற்றி ஓம்
- ஓம் உருவான கோலம் போற்றி ஓம்
- ஓம் சாந்தமே உருவாய் போற்றி ஓம்
- ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி ஓம்
- ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி ஓம்
- ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி ஓம்
- ஓம் கையிரண்டு உடையாய் போற்றி ஓம்
- ஓம் கரைபுரண்ட கருணை போற்றி ஓம்
- ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி ஓம்
- ஓம் மோனநல் தவத்தாய் போற்றி ஓம்
- ஓம் யோகநல் உருவே போற்றி ஓம்
- ஓம் ஒளியென ஆனாய் போற்றி ஓம்
- ஓம் எந்திரத் திருவே போற்றி ஓம்
- ஓம் மந்திரத் தாயே போற்றி ஓம்
- ஓம் பிணி தவர்த்திடுவாய் போற்றி ஓம்
- ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி ஓம்
- ஓம் மாயவன் தங்கையே போற்றி ஓம்
- ஓம் சேயவன் தாயே போற்றி ஓம்
- ஓம் திரிபுரதாளே போற்றி ஓம்
- ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி ஓம்
- ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி ஓம்
- ஓம் வினையெல்லாம் தீர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி ஓம்
- ஓம் ஆருயிர் மருந்தே போற்றி ஓம்
- ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி ஓம்
- ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்
- ஓம் அருள் ஒளி செய்வாய் போற்றி ஓம்
- ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி ஓம்
- ஓம் கனவிலே வருவாய் போற்றி ஓம்
- ஓம் கருத்தொளி தருவாய் போற்றி ஓம்
- ஓம் மக்களை காப்பாய் போற்றி ஓம்
- ஓம் மனநோயை தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி ஓம்
- ஓம் இதயமாம் வீணை போற்றி ஓம்
- ஓம் உருக்கமே ஒளியே போற்றி ஓம்
- ஓம் உள்ளுறை விருந்தே போற்றி ஓம்
- ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் மனங் கனிந்து அருள்வாய் போற்றி ஓம்
- ஓம் நாதமே நலமே போற்றி ஓம்
- ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி ஓம்
- ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி ஓம்
- ஓம் உயர்நெறி தருவாய் போற்றி ஓம்
- ஓம் நித்தமுங் காப்பாய் போற்றி ஓம்
- ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்
- ஓம் பத்தினி பணிந்தாய் போற்றி ஓம்
- ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்
- ஓம் வித்தையே விளக்கே போற்றி ஓம்
- ஓம் விந்தையே தாயே போற்றி ஓம்
- ஓம் ஏழையர் அன்னை போற்றி ஓம்
- ஓம் எங்குவோர் துணையே போற்றி ஓம்
- ஓம் காலனை பகைதாய் போற்றி ஓம்
- ஓம் கண்மணி ஆனாய் போற்றி ஓம்
- ஓம் சத்தியப் பொருளே போற்றி ஓம்
- ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி ஓம்
- ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி ஓம்
- ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி ஓம்
- ஓம் ஆறாதார நிலையே போற்றி ஓம்
ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல தொட்டில் கட்டித் தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான் செத்தாலும் என்னப் போத்த வேணும் செத்தாலும் என்னப் போத்த வேணும் ( ஆத்தா உன் சேல…) ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும் இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும் கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் – நீ சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் ( ஆத்தா உன் சேல…) அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும் உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும் ( ஆத்தா உன் சேல…)