Skip to main content

Posts

Showing posts from 2017

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போலொரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை

எம் அன்னையின் குறிப்பேடுகளிலிருந்து… (பகுதி 1)

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது: வாழ்வென்பது உயிர் உள்ளவரை... தேவைக்கு செலவிடு... அனுபவிக்க தகுந்தன அனுபவி... இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி... இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை... ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை... மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே... உயிர் பிரிய தான் வாழ்வு...ஒரு நாள் பிரியும்... சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்... உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு... உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே... உன் குழந்தைகளை பேணு... அவர்களிடம் அன்பாய் இரு... அவ்வப்போது பரிசுகள் அளி... அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே... அடிமையாகவும் ஆகாதே... பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,  பாசமாய் இருந்தாலும்,  பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,  உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள். அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்... உன் சொத்தை தான் அனுபவிக்க,  நீ சீக்கிரம் சாக

நினைவுமலர் (PDF download)

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில் நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர் பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள் வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து.  ( Ver. 1) பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில் வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில் கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன் துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)

உதயன் கனடா -நினைவாஞ்சலி

லங்காசிறி அறிவித்தல்

31 ம் நாள் நினைவாஞ்சலியும் நன்றிநவில்தலும்

31 ம் நாள் நினைவாஞ்சலியும்  நன்றிநவில்தலும் அன்னைமடியில்  15-01-1941 ஆண்டவன் அடியில் 07-02-2017 கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி (ஈஸ்வரி) கோணேசபிள்ளை அவர்கள் அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா - நீ எம்மருகில் இருக்கையில் ஏதுகுறை எமக்கு இணையில்லா தெய்வமே எம் தாயே - உனை நினைக்கையில் வெம்பி மனம் துடிக்கின்றோம் அருகிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ-உம் நினைவுகளை என்றும் இதயத்தில் வைத்துப் பூசிப்போம்- ஆதி சக்தியாக எமை வழிநடத்தி செல்வீர்கள் அன்னையே! உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.  எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா" எனும் குடும்ப குல விளக்கு மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்து கொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செல

கண்ணீர் அஞ்சலி - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலி - திரு திருமதி சிவநாயகமூர்த்தி குடும்பத்தினர்

எனது உடலும் உயிரும் பொருளும் சகலம் ரமணார்ப்பணம்

எனது உடலும்  உயிரும்   பொருளும்   சகலம் ரமணார்ப்பணம்   எனது உடலும்  உயிரும்   பொருளும்   சகலம்   ரமணார்ப்பணம் கொடுக்கும் குணமே   அதுவும் உனது   பொறுத்து எனை ஏற்கனும்   கொடுக்கும் குணமே   அதுவும் உனது   பொறுத்து எனை ஏற்கனும்   எனது உடலும்   உயிரும் பொருளும்   சகலம்   ரமணார்ப்பணம் எனது உடலும்   உயிரும் பொருளும்   சகலம்   ரமணார்ப்பணம் ... ஆதி அந்தம் கடந்த அறிவே   அனைத்தும் உனது ஆணையே   ஆதி அந்தம் கடந்த அறிவே   அனைத்தும் உனது ஆணையே   ஜோதி வடிவாய் திகழும் அருளே   துதிக்கும் அடியேனையே   ஜோதி வடிவாய் திகழும் அருளே   துதிக்கும் அடியேனையே   கருணை   கொண்டு கனிந்து இரங்கி   காத்து கரை சேர்க்கணும்   எனது உடலும்  உயிரும்   பொருளும்   சகலம் ரமணா அர்ப்பணம்   எனது உடலும்   உயிரும் பொருளும்   சகலம்   ரமணார்ப்பணம் செய்த வினையும் செய்யும் வினையும்   உனது தவ தீயிலே   செய்த வினையும் செய்யும் வினையும்   உனது தவ தீயிலே   தீந்து கருகி தணிந்து   நீராய் ஈர்ந்த நிலையாகவே ..

கண்ணீர் அஞ்சலி - திருப்பதி அருணாசலம் குடும்பம்

கண்ணீர் அஞ்சலி - செல்லத்துரை கமலாம்பிகை குடும்பம்

கண்ணீர் அஞ்சலி - சத்தியபாமா அருணாசலம் குடும்பம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

  ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே (சரணம்   ஐயப்பா   சுவாமி  சரணம்   ஐயப்பா சரணம்   ஐயப்பா  சுவாமி   சரணம்   ஐயப்பா) சரணகீர்த்தனம் பக்தமானஸம் பரணலோலுபம் நர்த்தனால ஸம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே (சரணம்   ஐயப்பா   சுவாமி  சரணம்   ஐயப்பா சரணம்   ஐயப்பா  சுவாமி   சரணம்   ஐயப்பா) பிரணயசத்யகம் பிராணநாயகம் பிரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம் பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே (சரணம்   ஐயப்பா   சுவாமி  சரணம்   ஐயப்பா சரணம்   ஐயப்பா  சுவாமி   சரணம்   ஐயப்பா) துரகவாகனம் சுந்தரானனம் வரகதாயுதம் தேவவர்ணிதம் குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே (சரணம்   ஐயப்பா   சுவாமி  சரணம்   ஐயப்பா சரணம்   ஐயப்பா  சுவாமி   சரணம்   ஐயப்பா) திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம் திரிநயன பிரபும் திவ்யதேசிகம் திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே (சரணம்   ஐயப்பா   சுவாமி  சரணம்   ஐயப்பா

ஆதிபராசக்தி 108 போற்றி திருவுரு

ஓம் ஒம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி ஓம் ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி ஓம் ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம் ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மனமாசை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி ஓம் ஓம் கனகவெளி ஆனாய் போற்றி ஓம் ஓம் புற்றாகி வந்தவளே போற்றி ஓம் ஓம் பாலகி வடிந்தவளே போற்றி ஓம் ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ஓம் ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி ஓம் ஓம் பாமலர் உவந்தாய் போற்றி ஓம் ஓம் பாம்புரு ஆனாய் போற்றி ஓம் ஓம் சித்துரு அமர்ந்தாய் போற்றி ஓம் ஓம் செம்பொருள் நீயே போற்றி ஓம் ஓம் சக்தியே தாயே போற்றி ஓம் ஓம் சன்மார்க்க நெறியே போற்றி ஓம் ஓம் சமதர்ம விருந்தே போற்றி ஓம் ஓம் ஓங்கார உருவே போற்றி ஓம் ஓம் ஒருதுவத்

சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க   5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க   10 Read more...

கந்த சஷ்டி கவசம்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக Read more...

அபிராமி அந்தாதி

காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. 1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே Read more...

ஆதிபராசக்தி மூல மந்திரம்

மூல மந்திரம் ஒம் சக்தியே ! பராசக்தியே ஒம் சக்தியே ! ஆதிபராசக்தியே ஒம் சக்தியே ! மருவூர் அரசியே ஒம் சக்தியே ! ஒம் விநாயகா ஒம் சக்தியே ! ஒம் காமாட்சியே ஒம் சக்தியே ! ஒம் பங்காரு காமாட்சியே ! Om Sakthiye Para Sakthiye Om Saktiye Adi Para Sakthiye Om Sakthiye Maruvoor Arasiya Om Sakthiye Om Vinayaga Om Sakthiye Om Kamatchiye Om Sakthiye Om Bangaru Kamatchiye

துர்க்காதேவி தோத்திரம்

ஐந்து கரத்தானை ஆனைமுகச் சுந்தரனைச் சிவ சோதியனை முந்திய நாதனை மூலமகா மந்திரனைக் கழல் வாழ்த்துவமே! சீர்தருவாரண செல்வனைத்தந்த சிவக்கொழுந்தே சூர்தருவேதனை தீர்திருவேலனை தொட்டணைத்து பார்தருசைவமும் வான்தருபேறும் படைத்தவனை தேர்தருதெல்லியூர் துர்க்கையை போற்றதும் சிந்தை வைத்தே.1 வைத்தகதேத்தும் பழவடியார் குலம் மாண்பு கௌ கைத்தலத்தே பொற்கலசமும் கஞ்சமும் கொண்டு இத்தலத்தேனு மணிநகர் துர்க்கை ரட்சகியே நித்திலம் பூர்த்த நகைமிகுமண்ட நெடுங்கொடியே. 2 கொடியே சுருதிக் குயிலே இமவான் குமாரி என்னும் பிடியே சிவமாமயிலே பிரணவம் பேச நின்ற முடிவே முதலே முதுபொருளே துர்க்கை மூவடிவே அடியேன் உனை எவ்வடிவினில் காண்பேன் அறைகுதியே. 3 அறையும் மறைகளும் ஆகமமும் கலை அத்தனையும் துறையும் இதிகாசமும் புராணங்களும் சொல்லடங்கா நிறையும் கருணையும் சச்சிதான்நதமாய் நீள்முடிவின் பிறையும் பொலிவுறும் துர்க்கைஅம்மா என்னும் பேரமுதே. 4 அமுதென்று அடைவார் அகத்தினும் வாக்கினும் ஆற்றலிலும் சமுகம் தரவல்ல சாமளையே தெல்லிதண்பதியின் கமளும் சிவபாரியாதமே துர்க்கை களஞ்சியமே சமயம் அறிந்திருந்தேத்த

படித்ததில் பிடித்தது

ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை…. எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான்உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் – நான்முதலடி வைக்கையில் தள்ளாட்டம் என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்… கொஞ்சம் பொறுமை கொள்க ! அதிகம் புரிந்து கொள்க! என்முதுமை பார்த்து முகம் சுளிக்காதே ! நான் சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே, உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க ! ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேனா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே. படுக்கை முழுதும் நீ பண்ணிய ஈரங்களின் ஈர நினைவுகளை இதயம் கொள்க ! ஒரே பேச்சை, தேய்ந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே…. ஒரே மாயாவி கதையை ஒரு நூறு முறை எனை படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை ஞாபகம்கொள்க ! நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே…. உன்னை குளிக்க வைக்க நான் செய்த யுக்திகளை எனக்காக புதுப்பித்துத் தருக! புதிய தொழில்நுட்பம், புதிய பயன்பாடுகள் – உன் புயல் வேகப் புரிந்துகொளல் சத்தியமாய் எனக்குச் சாத்தியமில்லை ! கேவலப் பட

கீதாச்சாரம்

Peaceful Aum namah Shivaya Mantra

Lankasri Notice

மரண அறிவித்தல் - கனடா உதயன் பத்திரிகை