Skip to main content

Posts

நினைவுமலர் (PDF download)

திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில்
நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர்
பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள்
வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து.  ( Ver. 1)

பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில்
வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில்
கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன்
துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)

Recent posts

காயத்ரி மந்திரம்

ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல

ஆத்தா உன் சேல – அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான்
செத்தாலும் என்னப் போத்த வேணும்
செத்தாலும் என்னப் போத்த வேணும்

( ஆத்தா உன் சேல…)

ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் – நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்

( ஆத்தா உன் சேல…)

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்

( ஆத்தா உன் சேல…)

2ம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை

திதி: 17.01.2019

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து ஆண்டுகள் இரண்டு ஆயினும் எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்  ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்  அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து  கண்களில் நீர் சொரிந்து  கலங்குகிறோம் உங்கள் நினைவால்  இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!  நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்! 
ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே  சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி  நாளும் இறைவனை வேண்டுகின்றோம்! கணவன், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க

ஜனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போலொரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை …

எம் அன்னையின் குறிப்பேடுகளிலிருந்து… (பகுதி 1)

*வள்ளலார்கூறியஅற்புதமானவாழ்க்கைபோதனை.....*👇👇👇
*இதற்குமேல்எவரும்அறிவுரைகூறஇயலாது,,,,*

*வாழ்வென்பதுஉயிர்உள்ளவரை.........!!!*
*தேவைக்குசெலவிடு........*
*அனுபவிக்கதகுந்தனஅனுபவி......*
*இயன்றவரைபிறருக்குபொருளுதவிசெய்மற்றும்ஜீவகாருண்யத்தைகடைபிடி.....*
*இனிஅநேகஆண்டுகள்வாழப்போவதில்லை......*
*போகும்போதுஎதுவும்கொண்டுசெல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமானசிக்கனம்அவசியமில்லை. .*
*மடிந்தபின்என்னநடக்கும்என்றுகுழம்பாதே...*
*உயிர்பிரியதான்வாழ்வு...... ஒருநாள்பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம்எல்லாமேபிரிந்துவிடும்.*
*உயிர்உள்ளவரை, ஆரோக்கியமாகஇரு......*
*உடல்நலம்இழந்துபணம்சேர்க்காதே.....*
*உன்குழந்தைகளைபேணு......*
*அவர்களிடம்அன்பாய்இரு.......*
*அவ்வப்போதுபரிசுகள்அளி......*
*அவர்களிடம்அதிகம்எதிர்பாராதே........*
*அடிமையாகவும்ஆகாதே.........*
*பெற்றோர்களைமதிக்கும்குழந்தைகள்கூட* *பாசமாய்இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலைகட்டாயத்தாலோ*, *உன்னைகவனிக்க* *இயலாமல்தவிக்கலாம், புரிந்துகொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரைமதிக்காத* *குழந்தைகள்*
*உன்சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டைபோடலாம்......*
*உன்சொத்தைதான்அனுபவிக்க,* *நீசீக்க…